முதலிரவு குறித்து வகுப்பறையில் பாடம் எடுத்த ஆசிரியர்: மாணவிகளின் தர்ம அடியால் பரபரப்பு

செவ்வாய், 13 டிசம்பர் 2022 (20:02 IST)
முதலிரவு குறித்து வகுப்பறையில் பாடம் எடுத்த ஆசிரியர்: மாணவிகளின் தர்ம அடியால் பரபரப்பு
முதலிரவு என்றால் என்ன என்பது குறித்து மாணவிகளுக்கு ஆசிரியர் பாடம் எடுத்த நிலையில் அந்த ஆசிரியருக்கு மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தர்மஅடி கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் என்ற பகுதியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரகாஷ். இவர் வகுப்பறையில் மாணவ மாணவிகள் மத்தியில் முதலிரவு என்றால் என்ன என்பது குறித்தும் தாம்பத்தியம் குறித்தும் பாடம் எடுத்து உள்ளார் 
 
இதனால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிரகாசுக்கு தர்ம அடி கொடுத்தனர். அப்போது மாணவ மாணவிகளும் ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து பள்ளி நிர்வாகம் ஆசிரியர் பிரகாசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்