வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வரும் 24ம் தேதியன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது முன்கூட்டியே அடுத்த 24 மணி நேரத்திற்கு வங்கக்கடலில் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது. மேலும் அரபிக்கடலில் லட்ச்சத்தீவை ஒட்டி நிலை கொண்டு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது
இதனால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், வட மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K