காந்தாரா படம் அடைந்த இமாலய வெற்றியை அடுத்து மூன்று ஆண்டுகள் உழைப்பில் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா 1 திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ருக்மிணி வசந்த் மற்றும் ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடிக்க ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டபோதும் இன்னும் கணிசமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்நிலையில் 2 வாரத்தில் சுமார் 717. 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீபாவளிக்கு மூன்று படங்கள் ரிலீஸாகியுள்ள போதிலும் காந்தாரா 100 திரைகளுக்கு மேல் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.