தீபாவளி ரேஸில் முந்தியது யார்? டியூட், பைசன், டீசல் முதல் நாள் வசூல் விவரங்கள்..!

Mahendran

சனி, 18 அக்டோபர் 2025 (14:32 IST)
தீபாவளியை முன்னிட்டு வெளியான மூன்று தமிழ்த் திரைப்படங்களின் முதல் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
 
பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' திரைப்படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த 'பைசன் காளமாடன்', மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த 'டீசல்' ஆகிய படங்களை விஞ்சி, பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் முன்னிலை வகிக்கிறது.
 
முதல் நாள் வசூல் விவரம் 
 
 
டியூட்முதல் நாள் வசூல் ரூ.11 கோடி (தமிழில் ரூ.7 கோடி)
 
பைசன் காளமாடன் முதல் நாள் வசூல் ரூ. 2.30 கோடி
 
டீசல் முதல் நாள் வசூல் ரூ.40 லட்சம்
 
கீர்த்தீஸ்வ்ரன் இயக்கத்தில் வெளியான 'டியூட்' திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 'லவ் டுடே', 'டிராகன்' படங்களுக்கு பிறகு, பிரதீப் ரங்கநாதன் 'டியூட்' மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 
 
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகாததால், இளம் நடிகர்களின் படங்களுக்கு கிடைத்த வரவேற்பில் 'டியூட்' திரைப்படம் வசூலில் ஆதிக்கம் செலுத்தி, தீபாவளி வெற்றியாளராக உருவெடுத்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்