எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்: மருத்துவமனை தகவல்

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (10:25 IST)
கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவர்கள் கடந்த 2ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  80% வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கை வெளியிட்டதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது.
 
ஆனால் தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட உயர் சிகிச்சையால் நேற்று அவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. 69% வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு 29% ஆக குறைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
 
மேலும் அவரது உடலில் பிற செயல்பாடுகள் நல்ல முறையில் இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளதால் வெகுவிரைவில் அவர் முற்றிலும் குணமாகி வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்