திமுக ஒரு கம்பெனி, அதன் டைரக்டர் ஸ்டாலின்: முதல்வர் பழனிசாமி

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (14:07 IST)
திமுக ஒரு அரசியல் கட்சி கிடையாது என்றும் அது ஒரு கம்பெனி என்றும் அதன் டைரக்டர் ஸ்டாலின் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக கவனித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக திமுக அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன
 
குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தேர்தல் பிரச்சார பரப்புரை ஒன்றில் முதல்வர் பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 
 
திமுக என்பது ஒரு அரசியல் கட்சி கிடையாது என்றும் அது ஒரு கம்பெனி என்றும் ஸ்டாலின் தான் அந்த கம்பெனியின் டைரக்டர் என்றும் கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்றால் அம்மா அரசு மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் எனவே அனைவரும் இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் என்று முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்