"திமுக தமிழைத் திருடிவிட்டது": துக்ளக் குருமூர்த்தியின் காரசாரமான பேச்சு

Mahendran

திங்கள், 8 செப்டம்பர் 2025 (17:27 IST)
இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு 2025-இல், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியும், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியருமான எஸ். குருமூர்த்தி, தி.மு.க.வை "நேர்மையற்ற கட்சி" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். தி.மு.க. திராவிட சித்தாந்தத்திற்கும், தமிழ் அடையாளத்திற்கும் உண்மையற்றது என்றும், தமிழ் பெருமை என்பது அக்கட்சியால் "திருடப்பட்ட அடையாளம்" என்றும் அவர் தெரிவித்தார்.
 
திராவிட இயக்கத்தின் தோற்றம் குறித்து பேசிய குருமூர்த்தி, ஈ.வெ. ராமசாமி பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸில் இருந்து விலகி, ஆரியர்-திராவிடர் என்ற பிரிட்டிஷ் இன கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு தனிப்பாதை அமைத்தார்.
 
"திராவிடர் என்ற அடையாளத்திற்கு மொழி இல்லை, அது இனத்தை அடிப்படையாகக்கொண்டது. தமிழ் திராவிடம் என்றால், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்ன?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 
பெரியார், பிராமணத்துவத்தை கடுமையாக விமர்சித்தபோதும், ஒரு நேர்மையான சிந்தனையாளர் என்று குருமூர்த்தி கூறினார். ஆனால், திராவிட இனம் தோல்வியடைந்த பிறகு, தி.மு.க. தமிழ் பெருமையை தன்னுடையதாக ஆக்கிக்கொண்டதால், தி.மு.க.வை நேர்மையற்ற கட்சி என்று அழைத்தார்.
 
"இது திருடப்பட்ட அடையாளம். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரையும் தமிழ் அடையாளத்தையும் ஒன்றாக வைத்திருக்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
 
தி.மு.க. திருடிய தமிழை, மோடி மீட்டெடுத்து வருகிறார்" என்று கூறி குருமூர்த்தி தனது பேச்சில் கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்