இன்று காலையில் சற்றுக் குறைந்திருந்த தங்கம் விலை தற்போது திடீரென உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் கடந்த மாதத்திலிருந்து இந்த மாதத்திற்குள் சவரன் ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஆறுதல் தரும் விதமாக கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970க்கும், சவரன் ரூ.280 குறைந்து ரூ.79,760க்கும் விற்பனையானது.
இந்நிலையில் பலரும் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்த நிலையில் மாலைக்குள் மீண்டும் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது கிராமுக்கு ரூ90 உயர்ந்து ரூ.10,060க்கும், சவரன் 720 ரூபாய் உயர்ந்து ரூ.80,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் தங்கம் விலை குறைவால் நிம்மதியடைந்த மக்களுக்கு இந்த திடீர் உச்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K