முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளருமான சத்யபாமா, அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கை அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
சத்யபாமா, கோபிசெட்டிபாளையம் அதிமுக அலுவலகத்திற்கு வந்து, செங்கோட்டையன் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே அவரை கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். செங்கோட்டையன், சத்யபாமாவின் ஆகியோர்களின் கட்சி பதவி நீக்கம், அதிமுகவில் தற்போது நிலவி வரும் உட்கட்சி பூசலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.