திடீரென டெல்லி செல்லும் செங்கோட்டையன்.. மன நிம்மதிக்காக செல்வதாக பேட்டி..!

Siva

திங்கள், 8 செப்டம்பர் 2025 (08:19 IST)
அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அவர்களின் டெல்லி பயணம் குறித்த அறிவிப்பு, பல யூகங்களை ஏற்படுத்தியது. ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பயணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
 
டெல்லிக்கு செல்வது ஒரு ஆன்மிகப் பயணம் மட்டுமே என்று செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார். “எனது மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன். இது ஒரு ஆன்மிகப் பயணம். அரசியல் பயணம் அல்ல,” என்று அவர் விளக்கமளித்தார். 
 
செங்கோட்டையனின் டெல்லி பயணம், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக இருக்கலாம் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், அவர் அதை மறுத்தார். “எனது பயணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் யாரையும் சந்திக்கப்போவது இல்லை. இது முற்றிலும் தனிப்பட்ட பயணம்,” என்று அவர் உறுதிப்படுத்தினார். 
 
செங்கோட்டையன் டெல்லி பயணத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்