டி.டி.வி. தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: நயினார் நாகேந்திரன்

Mahendran

திங்கள், 8 செப்டம்பர் 2025 (12:04 IST)
டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு மற்றும் அதிமுகவின் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் அண்ணாமலை அவர்கள், அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக வேண்டும் என தெரிவித்தார், நான் எதுவும் கூறவில்லை. 
 
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் குறித்து தான் எதையும் அறிவிக்கவில்லை. கூட்டணியில் இருந்து அ.ம.மு.க. விலக தான் காரணம் என டி.டி.வி. தினகரன் கூறியது எந்த அடிப்படையில் என்பது தனக்குத் தெரியவில்லை எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
 
டி.டி.வி. தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இதுவரை இருந்ததில்லை. ஆனாலும், அவர் திடீரென என் மீது ஏன் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் என்பது புரியவில்லை எனவும் அவர் கூறினார்.
 
அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து அணிகளும் இணைய வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே தான் வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு, தமிழக அரசியல் களத்தில் மேலும் சில விவாதங்களை உருவாக்கியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்