மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம்.. வைகோ அதிரடி நடவடிக்கை..!

Mahendran

திங்கள், 8 செப்டம்பர் 2025 (11:08 IST)
மதிமுகவின் முக்கிய தலைவராக இருந்த மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக  நீக்குவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மதிமுகவின் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5 விதி-19, பிரிவு- 12, விதி-35, பிரிவு-14, விதி-35 பிரிவு-15ன் படி துணைப் பொதுச்செயலர் உள்ளிட்ட கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன். 
 
கட்சியின் துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்கபட்டிருந்த நிலையில், 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தன்னிடம் விளக்கமளிக்க வேண்டும் வைகோ தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்