கேரளாவில் மூளைத் தொற்றான 'அமிபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' என்ற நோயால் இன்னொரு மரணம் பதிவாகியுள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 56 வயதான ஷோபனா என்பவர், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து, சுகாதாரத்துறை இந்த நோய் சிகிச்சைக்கான சிறப்பு வழிகாட்டுதல்களை மருத்துவர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த நோயின் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.