திமுக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது- டிடிவி தினகரன் டிவீட்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:09 IST)
தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை  நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக திமுக அரசு மீது  அமமுக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு  நடந்த சட்டசபைத் தேர்தலில்  முக ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் கைப்பற்றியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையின்படி, மக்களுக்கு திட்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆட்சியின் மீது எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை  நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக திமுக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டிவிட்டர் பக்கத்தில்,

ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் சேவை செய்வதற்கான FMG தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர்வதற்கான வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை   இதுதொடர்பாக கடந்த ஜுலை மாதம் மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை.

எத்தனையோ வாக்குறுதிகளைப் போல தி.மு.க.வினர் இதனையும் காற்றில் பறக்கவிட்டுவிடுவார்களோ?! எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்