எங்க ஊருக்குள் ஹெச் ராஜா வரக்கூடாது – போஸ்டர் அடித்து ஒட்டிய மக்கள் !

Webdunia
திங்கள், 2 செப்டம்பர் 2019 (09:25 IST)
கடலூர் மாவட்டத்தில் அரியநாச்சி எனும் ஊரில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஹெச் ராஜா வரக்கூடாது என திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள அரியநாச்சி நாளை விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருக்கிறது. இதில் பாஜக வின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா கலந்துகொள்வதாக இருந்தது. இதையொட்டி பாஜகவினர், ஹெச்.ராஜாவை வரவேற்று விளம்பர பேனர்களும் வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஹெச் ராஜாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதிமுக கிளை நிர்வாகிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் ‘கடலூர் மாவட்டம் அரியநாச்சி கிராமத்தில் சார்-ஆட்சியரின் உத்தரவு மற்றும் திட்டக்குடி நீதிமன்றத்தின் உத்தரவு இவைகளை மீறி சாமி பெயரில் வன்முறை தூண்டவரும் இந்து அதர்ம கொள்கை வாதி ஹெச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவண் அதிமுக மற்றும் திமுக கிளைக் கழகங்கள்’ எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த போஸ்டரால் பரபரப்பு தொற்றிக்கொள்ள அங்கு போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அந்த பகுதியில்  மாரியம்மன் கோவில் திருவிழா சார்பாக இரு தரப்புக்கு இடையில் பிரச்சனை உள்ள நிலையில் ஹெச் ராஜா வந்தால் அங்கு பிரச்சனை உருவாகும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்