நிர்வாகிகள் கூட்டம், வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் – பரபர ஸ்டாலின் !

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (07:49 IST)
சென்னையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்தக்ல் குறித்த முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக தனது பலத்தை நிரூபிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் திமுக மட்டுமே வலுவானக் கட்சியாக இருந்து வருகிறது. அதை உபயோகித்து இந்த  தேர்தலில் பெரும்பாணமை இடங்களில் வெற்றிப் பெற வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளை இட்டிருக்கிறாராம்.

தேர்தல் குறித்துதான் இன்று அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகமாகப் பேசப்பட்டதாகத் தெரிகிறது. இன்று நடைபெற்றக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், வழக்கறிஞர்கள்  ஆகியோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் ‘மக்களிடம் செல்வோம். மக்களிடம் சொல்வோம்,மக்கள் மனதை வெல்வோம்’ என முழக்கமிட்டிருக்கிறார்.

மேலும் கட்சி நிர்வாகிகளைக் கிராமங்களுக்கு சென்று கிராமசபைக் கூட்டம் நடத்த ஆனையிட்டிருக்கிறார். இந்த கிராம சபைக் கூட்டத்திற்குக் கழக தலைமை உறுப்பினர்களையும் கலந்து கொள்ளும்படி அன்புக் கட்டளை இட்டிருக்கிறார். தேர்தலுக்கு முன் தமிழகத்தில் உள்ள் எல்லாக் கிராமங்களிலும் கூட்டம் நடத்தி முடிக்க வேண்டும் என்பது நிர்வாகிகளுக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்.

மேலும் திமுக வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள தொகுதிகளையும் தேர்ந்த்டுக்க சொல்லி அந்த தொகுதிகளுக்கான மாதிரி வேட்பாளர்களையும் தேர்ந்தெடுத்து வைத்துள்ளதாம் திமுக தலைமை. விரைவில் அவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தி வேட்பாளர்களை இறுதி செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறை அதிகமாக புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்