மக்களிடம் செல்வோம், சொல்வோம், வெல்வோம்: திமுகவின் புது முழக்கம்

திங்கள், 24 டிசம்பர் 2018 (19:33 IST)
இந்தியா முழுக்க வரும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக தேதிய கட்சிகளும் மாநில கட்சிகளும் இப்போதே தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன. 
 
இந்நிலையில், நேரத்தில் தமிழகத்தில் வேறு உள்ளாட்சி தேர்தலும், 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க வாப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தற்போது திமுக தீவிரமாக தயாராகி வருகிறது.
 
இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி வாரியாகவும் அதேபோல் நாடாளுமன்ற தேர்தலுக்காகவும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும், திமுக தேர்தல் முழக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்பதே அது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்