தேமுதிக சின்னம் பறிபோகிறதா? தொண்டர்கள் அதிர்ச்சி..கேப்டனின் அடுத்த பிளான் என்ன ?

Webdunia
ஞாயிறு, 2 ஜூன் 2019 (17:15 IST)
விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சி கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 8.38% சதவீத வாக்குகளைப்பெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 10.08 % வாக்குகளைப் பெற்ற தேமுதிக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 7.88 % வாக்குகளைப் பெற்றது மட்டுமல்லாமல் 29 இடங்களையும் பெற்றது.
அதன் பின்னர் அதிமுகவுடன் மோதல் ஏற்பட்டு அதன் கூட்டணியிலிருந்து விலகியது.இதையடுத்து அதன் வாக்கு சதவீதம் 6 % கீழ் குறைந்தது.
 
இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக கட்சி 2.19% வாக்குகள் மட்டுமே பெற்றது.
 
இதையடுத்து வாக்கு எண்ணிக்கை 6% கீழ் போகும் போது மாநில கட்சிக்கான அங்கீகாரம் பறிபோகும். அதன்படி தேமுதிக மாநில கட்சி என்ற அங்கிகாரத்த இழக்க உள்ளது.அதனுடைய சின்னமும் பறிபோகிறது.
 
மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது தமிழக தேர்தல் ஆணையத்தின் அறிக்கைபெற்ற பின்னர் தேமுதிக மீதான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் ஆலோசனை நடத்துவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்