சசிகலாவின் தம்பி திவாகரன் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கும் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு இடையே மோதல் நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சசிகலாவின் கணவர் நடராஜன் தினகரனுக்கும், திவாகனுக்கும் இடையே பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொண்டார்.
ஆனால் அதனை தான் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைத்ததாக கூறினார். இது குறித்து தினகரனிடம் கேள்வி எழுப்பியபோது, நடராஜன் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் கிடையாது. எனவே அதனை நம்ப வேண்டாம் என கூறினார்.
இந்நிலையில் தினகரனுக்கு எதிராக திவாகரனை ஒரு சிலர் கொம்பு சீவி வருவதாக செய்திகள் வந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவின் பேச்சாளரும், தினகரன் ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத், திவாகரன் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. தினகரனுடைய, உறவினர் என்ற முறையில் மட்டுமே அவருடன் தொடர்பில் இருக்கிறார் என்றார்.
திவாகரன் அதிமுகவிலேயே இல்லை என்பதை உணர்த்த தான் தினகரன் நாஞ்சில் சம்பத்தை பேட்டியளிக்க வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.