டிஜிபி உள்பட முக ஸ்டாலினை சந்திக்கும் உயரதிகாரிகள்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (18:26 IST)
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர் 
 
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 117 இடங்கள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் திமுக தனித்து 124 தொகுதிகளிலும் கூட்டணியுடன் 157 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன
 
இதனை அடுத்து திமுக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கிறார் போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி திமுக தலைவர் ம க ஸ்டாலின் அவர்களை டிஜிபி உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர் 
 
டிஜிபி மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட மரியாதை நிமித்தமாக வருங்கால முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்