களையெடுப்பு எல்லாம் வெறும் கப்சாவா? உதயநிதியை நோக்கி பாயும் தோட்டா!

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (13:22 IST)
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞர் அணி நிர்வாகிகளில் மாற்றம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளார். 
 
திருவாரூரில் குளம் தூர்வாரும் பணியை துவங்கி வைத்தார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இதற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியது பின்வருமாறு... 
 
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரி சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி மதுரை மற்றும் திருக்குவளையில் குளம் தூர்வாரும் பணி துவங்கப்படுவிட்டது. 
இளைஞர் அணியால் முடிந்த அளவிற்கு தமிழகம் முழுவதும் குளம் தூர்வாரும் பணி செய்யப்படும். அதேபோல், இளைஞர் அணி நிர்வாகிகளில் மாற்றம் ஏதுமில்லை, நேர்காணல் மட்டுமே நடந்துள்ளது. 
 
செப் 14 ஆம் தேதி இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை துவங்க உள்ளது. 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். 
 
உதயநிதி இளைஞர் அணி செயலாளர் ஆனதும் நிர்வாகிகளை களையெடுத்து வருகிறார் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படும் என பேசியது எல்லாம் வெறும் கப்சாவா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்