யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

Prasanth K

ஞாயிறு, 6 ஜூலை 2025 (14:06 IST)

உத்தர பிரதேசத்தி சித்தரகூட் காட்டுக்குள்ளே அரசு கட்டி வரும் கண்ணாடி பாலம் ட்ரோல் மெட்டீரியல் ஆகியுள்ளது.

 

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படும் கண்ணாடி பாலங்கள் தற்போது ட்ரெண்டாகியுள்ள நிலையில் பல மாநிலங்களில் மக்களை கவர இந்த கண்ணாடி பாலங்களை அமைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, கேரளாவில் மூணார் உள்ளிட்ட இடங்களில் இவ்வாறான கண்ணாடி பாலங்கள் அமைக்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

 

இந்நிலையில் உத்தர பிரதேச அரசும் அங்கு ஓரிடத்தில் கண்ணாடி பாலம் அமைத்து வருகிறது. ராமாயணத்துடன் தொடர்புடைய இடமாக கருதப்படுவது சித்திரகூட் காட்டுப்பகுதி. ராமர் வனவாசம் சென்ற காடு என்று கூறப்படும் இந்த காட்டில் ராமரின் வில் போன்ற வடிவம் கொண்ட பிரம்மாண்ட கண்ணாடி பாலத்தை உ.பி அரசு கட்டி வருகிறது.

 

ஆனால் இந்த பாலம் அமைக்கப்படும் இடத்தை சுற்றி எந்த சுற்றுலா பகுதியும் இல்லை என கூறப்படுகிறது. மேலும் பாலம் அமைக்கப்படும் பகுதியே பெரும் ஜனநடமாட்டம் அற்ற, பேருந்து வசதிகளும் அற்ற பகுதி எனக் கூறப்படுகிறது. அப்படியான பகுதியில் இவ்வளவு செலவு செய்து கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு வருவது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள பலரும், வனவிலங்குகள் கண்ணாடி பாலத்தில் நின்று ரசிப்பதற்காக பாலம் கட்டப்பட்டு வருவதாக கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்