வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

Siva

ஞாயிறு, 6 ஜூலை 2025 (13:26 IST)
நாமக்கல் அருகே, வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவரும், அரசு பள்ளி ஆசிரியையான அவரது மனைவியும் அதிகாலை நேரத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நாமக்கல் தில்லைபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (54), திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரிந்த இவர், ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
 
இவரது மனைவி பிரமிளா (50), ஆண்டாபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களின் மகளின் காதல் திருமணம் தொடர்பாக குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இந்தச் சூழலில்தான், நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி பகுதியில், இன்று அதிகாலை 5 மணியளவில், சுப்பிரமணியனும் பிரமிளாவும் ரயில் முன் பாய்ந்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
 
நாமக்கல் ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு, இந்த சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்