கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மின்சார பேருந்து வசதிகள் சில வழித்தடங்களில் கோளாறை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் பேருந்துகளால் ஏற்படும் புகை மாசை குறைக்கும் வகையில் புதிதாக மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சென்னையின் பல முக்கிய வழித்தடங்களில் இந்த மின்சார பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளே ஒரு பேருந்து ஸ்டான்லி மருத்துவமனை அருகே கோளாறு காரணமாக நின்றது. தொழில்நுட்ப பிரிவினர் வந்தும் சரிசெய்ய முடியாததால் அந்த பேருந்து டோவ் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து வேறு சில இடங்களிலும் மின்சார பேருந்துகள் சிக்கலை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. சில பகுதிகளில் பேருந்தின் பேட்டரி பாதி வழியிலேயே தீர்ந்து போய் விடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. மின்சார பேருந்துகள் இயக்குபவர்களுக்கு, பணியாளர்களுக்கு போதிய பயிற்சிகள் இதுகுறித்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
Edit by Prasanth