செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டிப்பு..! பிப்.20ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!

Senthil Velan
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (16:03 IST)
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. இதை அடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி  அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

ALSO READ: அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 20ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்