செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல்.. தள்ளிபோகுமா வழக்கின் விசாரணை?

Mahendran

வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (12:55 IST)
அமலாக்கதுறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரும் மனு மீதான விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த மனு குறித்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில்  முறையீடு செய்ய உள்ளனர். செந்தில் பாலாஜி மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்கின் விசாரணை தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 
முன்னதாக பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக அவர் சிறையில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்