மத்திய அரசை கண்டித்து மீண்டும் போராட்டம்.. திமுக அதிரடி அறிவிப்பு..!

Mahendran

வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (15:22 IST)
மத்திய அரசை கண்டித்து சமீபத்தில் திமுக போராட்டம் நடத்திய நிலையில், பிப்ரவரி 25ஆம் தேதி மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என திமுக மாணவர் அணி தெரிவித்துள்ளது.

திமுக மாணவர் அணி கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் ஐந்து தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

அதில், மதத்தின் பெயரால் பிற்போக்கு சிந்தனையை தமிழ்நாட்டில் விதைக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

 மத்திய கல்வி மந்திரியின் ஆணவப் பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு, தமிழ்நாட்டு கல்வி நிதியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மத்திய அரசுக்கு எதிராக பிப்ரவரி 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில், மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகை செய்து போராட்டம் நடத்துவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்