செந்தில் பாலாஜி ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை..அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு..

Siva

வியாழன், 15 பிப்ரவரி 2024 (07:25 IST)
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் நிலையில் அவருக்கு ஜாமீன் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால் இந்த முறை கண்டிப்பாக அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்றைய விசாரணையின்போது செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர், அமலாக்கத்துறை தனது நடவடிக்கை அனைத்தையும் முடித்து விட்டதால் இனி சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இல்லை என்றும் எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

ஆனால் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இன்னும் ஆஜராகவில்லை என்றும் செந்தில் பாலாஜி அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறி ஜாமீன் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய அமலாக்கத்துறையின் வாதத்திற்கு பின்னர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்