மும்மொழி கல்வி கற்க எங்களுக்கு உரிமை தாருங்கள்.. முதல்வருக்கு அரசு பள்ளி மாணவிகள் கோரிக்கை..!

Siva

வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (15:21 IST)
மத்திய அரசின் மும்மொழி கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்றும், தனியார் பள்ளிகளில் மூன்று மொழிகளை மாணவர்கள் கட்டாயமாகக் கற்கின்ற நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கும் மூன்று மொழிகளை கற்க உரிமை வழங்க வேண்டும் என்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கையை தெரிவிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்மொழிக் கொள்கை என்பது தமிழ், ஆங்கிலம் தவிர வேறு ஏதாவது மொழியை கற்பது மட்டுமே என்று மாணவிகள் கூறியுள்ளனர். ஹிந்தி கட்டாயம் இல்லை என்றும், தாங்கள் விருப்பப் பாடமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளை படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோவில், "தமிழக முதல்வர் அவர்களே, அரசு பள்ளியில் எங்களுக்கு மும்மொழி கற்க உரிமை இல்லையா? ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்க அனுமதி வழங்குங்கள்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Edited by Siva 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்