நாடு முழுவதும் கொரோனா வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் வடிவேலுவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 42 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அரசின் இந்த முயற்சியில் தனியார் நிறுவனங்களும் கைக்கோர்த்துள்ளன. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்கள் பயனாளர்களின் காலர் ட்யூன்களில் பாடலுக்கு பதிலாக கொரோனா விழிப்புணர்வு செய்தி ஒலிக்குமாறு செய்துள்ளன. இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்த கொரோனா விழிப்புணர்வு ஆடியோவுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகளை இணைத்து வீடியோவாக சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். பார்க்க நகைச்சுவையாக இருக்கும் அதே நேரம் கொரோனா குறித்த விழிப்புனர்வையும் மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் உள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.