கொரோனா அச்சுறுத்தல்; பள்ளிகளில் பயோ மெட்ரிக் நிறுத்தம்..

Arun Prasath

திங்கள், 9 மார்ச் 2020 (12:11 IST)
கொரோனா வைரஸால் தமிழகத்திலும் பரவியுள்ள நிலையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவை தொடர்ந்து பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக பள்ளிகளில் மார்ச் 31 ஆம் தேதி வரை பயோ மெட்ரிக் வருகைப்பதிவை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்