வீட்டுக்கு சென்ற கொரோனா நோயாளி மூன்று நாட்களில் உயிரிழப்பு! – சென்னையில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 25 மே 2020 (12:01 IST)
சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி 54 வயது நபர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டிஸ்சார்ஞ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

வீட்டிற்கு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்கு பிறகு அந்த நபருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்