ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கருவறை அருகே இசைஞானி இளையராஜா சென்றதாகவும், அப்போது அவர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது மட்டுமின்றி உலக புகழ் பெற்றது என்பது தெரிந்ததே.
அந்தநிலையில், இளையராஜா கருவறைக்கு முன்பு உள்ள மண்டபத்தில் நுழைந்த போது, அவரை தடுக்கப்பட்டதாகவும், பின்னர், அர்த்தமண்டபத்தின் படி அருகே நின்றபடியே கோவில் மரியாதையை ஏற்றுக்கொண்டு, ஆண்டாளை தரிசனம் செய்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
இளையராஜா கருவறைக்குள் செல்ல முயன்றபோது, அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் விதிமீறல் இருப்பதாக சிலர் முறையிட்டுள்ளனர். அவர் கருவறைக்கு செல்லக்கூடாது என்றும், அவரை அனுமதிக்க கூடாது என்றும் ஜீயர்கள் முறையிடப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் தெரிவித்ததாவது: "ஆண்டாள் கோயிலின் விதிப்படி கருவறைக்கு ஒரு வரம்பு வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதை மீற யாருக்கும் அனுமதி கிடையாது" என்று கூறியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது பல்வேறு விவாதங்களுக்கு காரணமாகியுள்ளது.