
மாதம்தோறும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் சமையல் கேஸ் விலை குறைந்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளை போல கேஸ் சிலிண்டர் விலையும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களால் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ, வீட்டு பயன்பாட்டிற்கு 14.20 கிலோ என இரண்டு வகையான கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான விலை மாதம்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
அப்படியாக இந்த மாதம் சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1750 க்கு விற்பனையாகி வருகிறது. 14 கிலோ வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் கடந்த சில மாதங்களை போலவே இந்த மாதமும் ரூ.868.50 என்ற விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
Edit by Prasanth.K