மாதம்தோறும் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் இறக்குமதி மதிப்பை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் கேஸ் சிலிண்டருக்கான விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. கேஸ் சிலிண்டர்கள் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் என தனித்தனியாக விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் இந்த மாதம் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 கிலோ எடைக் கொண்ட வணிக சிலிண்டர் ரூ.43.50 விலை குறைந்து ரூ.1921.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி தொடர்ந்து வருகிறது.
Edit by Prasanth.K