வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு! இந்த மாத கேஸ் விலை நிலவரம்!

Prasanth Karthick

வியாழன், 1 மே 2025 (08:56 IST)

இந்தியாவில் கேஸ் பயன்பாட்டிற்கான கட்டணம் மாதம்தோறும் நிர்ணயிக்கப்படும் நிலையில் இந்த மாதம் விலை குறைந்துள்ளது.

 

இந்தியா முழுவதும் பல பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெ விலை மாற்றத்தை பொறுத்து கேஸ் சிலிண்டர் விலையை ஒவ்வொரு மாதமும் முதல் நாள் நிர்ணயித்து வருகிறது.

 

அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்து ரூ.1906க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வணிக கேஸ் விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது சற்று விலை குறைந்துள்ளது சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்