20 தொகுதிகள் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதி: திருநாவுக்கரசர்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (08:30 IST)
தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் 18 தொகுதிகள் மற்றும் கருணாநிதி, ஏ.கே.போஸ் மறைவினால் காலியான இரண்டு தொகுதிகள் உள்பட 20 தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, தினகரன் கட்சி, கமல்ஹாசன் கட்சி, பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிடுவது உறுதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் இடைத்தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில், காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட இடங்களில் மீண்டும்  களமிறங்குவோம் என்று தெரிவித்தார். திருநாவுக்கரசரின் இந்த கருத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்