பாகிஸ்தான் ராணுவ தலைவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்து வருவதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெஹல்காம் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு பின், திடீரென பாகிஸ்தான் ராணுவ தலைவர் தலைவராகி இருப்பதாகவும், அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி, அவரது குடும்பம் ஏற்கனவே பாகிஸ்தானை விட்டு வெளியேறி வேறு நாட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள பல முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள், 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம், அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.