கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மாற்றம்: தலைமைக் கழகம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (21:42 IST)
10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள திமுக தற்போது சிறப்பான முறையில் ஆட்சி செய்து கொண்டிருப்பதாக அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது அதே நேரத்தில் கட்சியிலும் பலன் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் என்பவர் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
 
அவருக்கு பதிலாக கோவை தெற்கு மாவட்ட திமுக பொருளாளராக டாக்டருக்கு வரதராஜன் என்பவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக திமுக தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திடீர் என மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்