கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்படுகிறதா?

வெள்ளி, 25 ஜூன் 2021 (20:04 IST)
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
தொற்று குறையாத 11 மாவட்டங்களைத் தவிர மற்ற பகுதிகளில் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 சதவிகித நபர்களுடன்  வழக்கமான நேரத்தில் செயல்பட அனுமதி.
 
27 மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்படலாம்.
 
11 மாவட்டங்களில் தேநீர் கடைகள், புத்தக கடைகள், காலணி கடைகள், பேன்ஸி, ஜெராக்ஸ் கடைகள் செயல்படலாம்
 
தமிழ்நாட்டில் ஜூலை 5ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை.
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மத வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதி. அர்ச்சனை , திருவிழா ,  குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை
 
அனைத்து கடற்கரைகளிலும்  காலை 5 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதி.
 
தொற்று குறையாத கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு; டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியில்லை.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்