சிசிடிவி பொருத்தாத கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என கோவை மாநகர காவல்துறை பரிந்துரை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கோவையில் உள்ள அனைத்து கடைகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என காவல்துறை ஏற்கனவே கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சிசிடிவி பொருத்தாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய கோவை மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்படும் என காவல்துறையினர் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
குற்ற நடவடிக்கைகளை குறைப்பதற்கு ஒவ்வொரு கடைக்காரரும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என கோவை மாநகராட்சியும் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது