பல் வலி, ஹை பி பி, டி ஹைட்ரேஷன் – எடப்பாடியின் மெடிக்கல் ரிப்போர்ட் !

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (13:31 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக் கடந்த சில வாரங்களாக சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

முதல்வர் பழனிசாமி பழனிச்சாமி கடந்த சில வாரங்களாக சில உடல் அவதிகளால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் பல் வலிக்காக சில சிகிச்சைகளைப் பெற்று வருகிறார். நேற்று தண்ணீர்ப் பற்றாக்குறை தொடர்பான ஆய்வுக்கூட்டங்களில் கலந்துகொள்வதாக இருந்தார். ஆனால் திடீரென உயர் ரத்த அழுத்தம் மற்றும் டிஹைட்ரேஷன் ஆகிய பிரச்சனைகளால் அப்போல்லோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

சிகிச்சைக்குப் பின்னர் தலைமைச் செயலகம் செல்லாமல் அவர் வீட்டுக்கு திரும்பினார். இதனால் அவர் நேற்றுக் கலந்துகொள்வதாக இருந்த கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து இன்றும் அவர் அப்போல்லோ சென்று சிலப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார் என அதிமுக வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்