சென்னை மெட்ரோ ரயில் நிறுவனற்கு செல்லும் கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை..!

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:50 IST)
சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தை மெட்ரோ ரயில் எடுத்து இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை ஏற்று நடத்த சென்னை மெட்ரோ ரயில் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரயில்கள் இயக்கம், வாகன நிறுத்தம், மறுசீரமைப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஏற்று நடத்த மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் தெற்கு ரயில்வேவுக்கும் இடையே விரைவில் கையெழுத்தாகும் என்றும் அதன் பிறகு வேளச்சேரி - கடற்கரை ரயில் சேவை முழுமையாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.  
 
ஆனால் அதே நேரத்தில் மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட பின்னர் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிக்கு ஒரு ஆண்டு எடுத்து கொள்ளும் என்றும் அதன் பிறகு ரயில் இயக்கத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் கவனிக்கும் என்று கூறப்படுகிறது. மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டுக்குள் வேளச்சேரி கடற்கரை வழித்தடம் வந்தால்  சிறப்பாக இருக்கும் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்