கனமழையால் சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (10:21 IST)
கனமழை காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
இன்று காலை 6 மணி முதல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி கனமழை பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள் பின்வருமாறு:
 
1. ஈவேரா சாலை கங்கி ரெட்டி சுரங்கப்பாதை
 
2. வியாசர்பாடி சுரங்கப்பாதை
 
3. கணேஷபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன
 
மழை நீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:
 
1. ஈவேரா சாலையில் சென்னை சென்ட்ரல் சந்திப்பிலிருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈவேரா சாலை காந்தி இர்வின் சந்திப்பு வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும்
 
2. பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அவ்வாகனங்கள் பேந்தியன் சாலை வழியாக செல்லலாம். மார்ஷல் ரோட்டில் இருந்து பேந்தியன் ரவுண்டானாவை நோக்கி வாகனங்கள் வர அனுமதி உண்டு என சென்னை மாநகர போக்குவரத்து தெரிவித்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்