இரவு 11 மணி வரை மெட்ரோ சேவை!

திங்கள், 8 நவம்பர் 2021 (08:56 IST)
புறநகர் ரயில்களை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கும் என அந்நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
சென்னையில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் ஒரே நாளில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கன மழை காரணமாக புறநகர் ரயில் இயக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் இருந்த நிலையில் சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை நாள் முழுவதும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவை இன்று மட்டும் செயல்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்