ஓடும் ரயிலில் மாணவர்களிடையே மோதல்! – சென்னையில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (09:10 IST)
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று முதல் கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த இருவேறு கல்லூரி மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து ரயிலில் சென்று கொண்டிருக்கும்போதும் இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதுடன், மாணவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அங்கு விரைந்த ரயில்வே போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் மாணவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்