பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

Siva

புதன், 21 மே 2025 (14:11 IST)
பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், அதில் ஈடுபட்டவர்களை இதுவரை கைது செய்யாததை குறித்து காங்கிரஸ் கடும் விமர்சனம் எழுப்பியுள்ளது.
 
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், “தாக்குதல் நடந்த நாளிலிருந்து இதுவரை ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டமும் நடத்தப்படவில்லை. எல்லை பிரச்சனைகள், சீனா–பாகிஸ்தான் சூழல்கள் குறித்து விவாதிக்கவும் அனைத்து கட்சிகளுடனும் ஆலோசிக்கவும் கோரியுள்ளோம். ஆனால் பிரதமர் மோடிக்கு அதில் ஆர்வமில்லை போலிருக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.
 
மேலும், வெளிநாடுகளுக்கு எம்பிக்களை அனுப்பி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி விளக்கும் நிகழ்ச்சி அரசியலமைப்பு சிக்கல்களை மறைக்க மேற்கொள்ளப்படும் யுக்தி என்று விமர்சித்தார்.
 
பாகிஸ்தானுக்கு சீனாவே ஆதரவளிக்கிறது என்றும், சீனாவின் துணை இல்லாமல் பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்த முடியாது என்றும் ஜெயராம் ரமேஷ் கூறினார்.
 
“ஒரு மாதமாகிவிட்டும் பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் யாரும் பிடிக்கப்படவில்லை. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஏன்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்