நள்ளிரவில் ஓபிஎஸ் வீட்டில் டிடிவி தினகரன்: மனைவி மறைவுக்கு ஆறுதல்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (08:52 IST)
நள்ளிரவில் ஓபிஎஸ் வீட்டில் டிடிவி தினகரன்: மனைவி மறைவுக்கு ஆறுதல்!
அதிமுக பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலமான நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் 
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தேனியில் விஜயலட்சுமி உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்ற டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 4 ஆண்டுகளாக ஓபிஎஸ் மற்றும் சசிகலா, தினகரன் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து ஓபிஎஸ் மனைவியின் மரணத்திற்கு ஆறுதல் கூற டிடிவி தினகரன் வந்திருப்பது அரசியல் நாகரீகமாக கருதப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் பக்கம் ஓபிஎஸ் சாய்வார் என்றும் கூறப்படுவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்