மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் வசதி: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அசத்தல்

Webdunia
திங்கள், 30 செப்டம்பர் 2019 (19:14 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் பல்வேறு புதுப்புது வசதிகளை செய்து தருகிறது. பயணிகளுக்கு சைக்கிள், குறைந்த விலையில் கேப் வசதி, குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் வசதி உள்பட பல்வேறு வசதிகளை செய்து தரும் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தற்போது மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியையும் செய்து தந்துள்ளது
 
 
இந்த வசதி முதல்கட்டமாக சென்னை நந்தனம் மெட்ரோ ரயில்வே நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதே வசதி படிப்படியாக  அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு மற்றும் உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடங்கப்படவுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 
மெட்ரோ பயணிகள் தங்களுடைய மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் முதலில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று ELECTREEFI என்ற செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும் பின்னர் சார்ஜ் செய்யும் நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
 
மத்திய அரசு ஏற்கனவே மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்பட பல்வேறு வசதிகளை செய்து தரும் நிலையில் தற்போது மெட்ரோ ரயில் நிலையமும் சார்ஜ் வசதியை செய்து தருவதால் இன்னும் ஒருசில ஆண்டுகளில் மக்களிடையே மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்