சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (07:51 IST)
சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
அது மட்டும் இன்றி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன சென்னை பொறுத்தவரை அடையாறு மந்தைவெளி திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்